ஜப்பான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!
ஜப்பான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜப்பானில் ஹோன்சூ தீவுக்கு கிழக்கு கடற்கரை அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையப்பகுதி பசிபிக் பெருங்கடலில் 60 கிலோமீட்டர் (37 மைல்களுக்கு மேல்) ஆழத்தில் இருந்துள்ளது. டோக்கியோ உட்பட நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் காலை 6.57 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை, இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.