ராஜஸ்தான்: மைனர் பெண்ணுக்கு ஆபாச உரை மற்றும் வீடியோக்களை அனுப்பிய காவலர் இடைநீக்கம்..!
ராஜஸ்தானில் உள்ள அஜ்மீரில் மைனர் பெண்ணுக்கு ஆபாச உரை மற்றும் வீடியோக்களை அனுப்பிய காவலர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை அன்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது, அஜ்மீரில் ஒரு மைனர் பெண்ணுக்கு அநாகரீகமான குறுஞ்செய்தி மற்றும் வீடியோக்களை அனுப்பிய ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட விக்ரம் சிங், மீது ஐடி மற்றும் போக்சோ சட்டங்களின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விக்ரம் சிங்கிற்கு எதிராக பிசங்கன் பஞ்சாயத்து சமிதி உறுப்பினர் பிரதீப் குமவத் அளித்த புகாரின் படி, இந்த போலீஸ்காரர் கடந்த சில மாதங்களாகவே அந்த சிறுமியை துன்புறுத்தி வந்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து சிறுமியின் சார்பில் குமவாத் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து தெரிவித்த அஜ்மீர் போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஷ் சந்திர சர்மா, நாங்கள் குற்றம் சாட்டப்பட்ட கான்ஸ்டபிளை சஸ்பெண்ட் செய்துள்ளோம். அவர் மீது ஐடி சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விசாரணை முடிந்த பிறகு அவர் கைது செய்யப்படுவார் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.