சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது நபருக்கு 20 ஆண்டுகள் சிறை…!
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கரூரை சேர்ந்த 40 வயது நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கரூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கரூரில் கடந்த 2019-ஆம் ஆண்டு பள்ளி சென்று வீடு திரும்பிய மூன்றாம் வகுப்பு படிக்க கூடிய சிறுமியை 40 வயதான சரவணன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்திருந்தார். இந்நிலையில், இது தொடர்பாக கரூர் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நசீமா பானு, குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தற்பொழுது தீர்ப்பளித்துள்ளார்.