‘மார்க்கண்டேயன் ஸ்டாலின்’ – நடைப்பயிற்சியின் போது மக்களோடு உரையாடிய முதல்வர்…! வீடியோ உள்ளே…!
இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை அடையாறு தியோஃபிகள் சொசைட்டி வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட போது மக்களுடன் உரையாடினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தான் முதல்வர் என்பதையும் மறந்து வெளியே எங்கு சென்றாலும் மக்களை பார்த்தால் மிகவும் சாதாரணமான ஒரு மனிதனாக மக்களோடு மக்களாய் பேசுவது வழக்கம். அதே சமயம் முதல்வர் அவர்கள் தனது உடல் நலத்தை பாதுகாப்பதிலும் தனி கவனம் செலுத்தி வருகிறார்.அந்த வகையில் இவர் வாரத்தில் இரண்டு நாட்கள் சைக்கிளிங் செல்வது, நடைபயிற்சி மேற்கொள்வது, அவ்வப்போது ஜிம்முக்கு சென்று ஒர்க்அவுட் செய்வது போன்றவற்றை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை அடையாறு தியோஃபிகள் சொசைட்டி வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட போது, அவருடன் அமைச்சர் சுப்பிரமணியனும் நடைப்பயிற்சி செய்ய வந்திருந்தார்.
அப்போது அங்கு நடைப்பயிற்சி மேற்கொண்ட பொதுமக்களுடன் முதல்வர் மிகவும் இயல்பாக உரையாடினார். அச்சமயம் முதல்வருடன் பேசிய ஒரு பெண்மணி சார் இரண்டு வருடங்களுக்கு முன்பு உங்களை நான் ஏர்போட்டில் சந்தித்தேன். நீங்கள் கண்டிப்பாக ஆட்சிக்கு வரவேண்டும் என்று கூறினேன். இப்பொழுது நீங்கள் ஆட்சிக்கு வந்து விட்டீர்கள்.
உங்களது ஆட்சி மிகவும் சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு விஷயத்தையும் நீங்கள் பார்த்து பார்த்து செய்கிறீர்கள். இதை நீங்கள் இப்படியே தொடர வேண்டும் என்று பேசினார். மேலும் கால்பந்து விளையாட ஸ்பெயின் சென்று தங்களது பெயரில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தினார்.
முதல்வரிடம் விடாமல் பேசிய அந்தப் பெண்மணி கடைசியாக ஒன்று சார் என்று கூறி, எப்படி சார் இப்படி மார்க்கண்டேயனாகவே இருக்கீங்க என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஸ்டாலின் உடற்பயிற்சி செய்கிறேன் என்று கூறினார். முதல்வர் ஸ்டாப்களின் அவர்கள் மக்களுடன் மிகவும் சகஜமாக உரையாடிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள், இன்று காலை அடையாறு பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, “திமுக ஆட்சியால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து இருக்கிறோம்” என பொதுமக்கள் தெரிவித்தனர்!
‘A leader knows the way, goes the way, and shows the way!’#ChiefMinisterMKStalin pic.twitter.com/PGbrLR8uHp
— DMK (@arivalayam) September 21, 2021