அரசு காலி பணியிடங்களுங்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு குறித்த அறிவிப்பு…! எப்போது வெளியாகிறது தெரியுமா…?

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் நாளை நடைபெறும் ஆலோசனைக்கு பின் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசின் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான இடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் நடத்தப்படாமல் உள்ளது.
கொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை படிப்படியாக இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது. எனவே காலிப் பணியிடங்களுக்கான தேர்வை நடத்த அரசு பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ள நிலையில், இது தொடர்பாக நாளை அரசு பணியாளர் தேர்வாணையம் ஆலோசனை நடத்த உள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், செயலாளர், தேர்வு கட்டுப்பாட்டு துறை அலுவலர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். கூட்டத்தில் குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 ஆகிய முக்கிய தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது தொடர்பான ஆலோசனைகள் மேற்கொள்ள இருப்பதாகவும், இந்த தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் இந்த ஆலோசனைக்கு பின் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!
April 30, 2025
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025
கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!
April 30, 2025
“தவெக தொண்டர்களின் செயல் கவலை அளிக்கிறது!” விஜய் வேதனை!
April 30, 2025
சிறுமி உயிரிழப்பு எதிரொலி : மழலையர் பள்ளி உரிமம் ரத்து!
April 30, 2025