அகில பாரதிய அகாரா பரிஷத் தலைவர் தூக்கிட்டு தற்கொலை – மோடி இரங்கல்
அகில பாரதிய அகாரா பரிஷத் தலைவர் தூக்கிட்டு தற்கொலை.
உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள பாகம்பரி மடத்தில் அகில பாரதிய அகாரா பரிஷத் தலைவர் நரேந்திர கிரி அவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது மரணம் அங்கு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இவரது தற்கொலை குறித்து காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில், அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவரது இல்லத்தில் கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது .அந்த கடிதத்தில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
अखाड़ा परिषद के अध्यक्ष श्री नरेंद्र गिरि जी का देहावसान अत्यंत दुखद है। आध्यात्मिक परंपराओं के प्रति समर्पित रहते हुए उन्होंने संत समाज की अनेक धाराओं को एक साथ जोड़ने में बड़ी भूमिका निभाई। प्रभु उन्हें अपने श्री चरणों में स्थान दें। ॐ शांति!!
— Narendra Modi (@narendramodi) September 20, 2021
இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாநில காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.