2024 இல் மம்தா பானர்ஜி பிரதமராக வேண்டும் என விரும்புகிறேன் – பாபுல் சுப்ரியோ!
2024 இல் மம்தா பானர்ஜி பிரதமராக வேண்டும் என விரும்புகிறேன் என பாபுல் சுப்ரியோ விருப்பம் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் முக்கியமான பாஜக தலைவராக இருந்தவர் தான் பாபுல் சுப்ரியோ. கடந்த ஜூலை மாதம் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்ட போது பாபுல் சுப்ரியோவிடமிருந்து இணை அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. மேலும் அவருக்கு அமைச்சரவையிலும் இடம் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அதிருப்தி அடைந்த நிலையில், பாபுல் சுப்ரியோ அரசியலில் இருந்து விலக உள்ளதாக தந்த முகநூலில் பதிவிட்டு இருந்தார்.
ஆனால் பாஜக தலைவர்கள் அவரிடம் சமரசம் செய்ததை தொடர்ந்து அந்த முடிவை கைவிட்ட பாபுல் சுப்ரியோ, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி குறித்து பாபுல் சுப்ரியோ கூறுகையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா 2024 ஆம் ஆண்டில் பிரதமராக வேண்டும் என தான் விரும்புவதாகவும், பிரதமர் பதவிக்கு மம்தா பானர்ஜி முன்னணியில் இருப்பதை யாரும் மறுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.