பட்டாசு தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து – ஒருவர் பலி
சிவகாசி அருகே சரஸ்வதி பாளையத்தில் பட்டாசு தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்தால் ஒருவர் உயிரிழந்ததாக தகவல்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சித்துராஜபுரம் அய்யனார் காலனியில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் சின்ன முனியாண்டி என்பவர் உயிரிழந்த நிலையில், வேறு யாரும் விபத்தில் சிக்கி உள்ளார்களா என்று தேடும் பணி நடைபெற்று வருகிறது.
வெடி விபத்து ஏற்பட்ட பகுதியில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வருடமாக சிவகாசியை சுற்றி இயங்கு வரும் சிறு, குறு பட்டாசு ஆலைகளில் தொடர் வெடி விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்த நிலையில், இன்று மீண்டும் ஒரு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.