சீனாவில் படகு விபத்து: 10 பேர் பலி… 5 பேர் மாயம்..!
சீனாவின் ஜாங்கே ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 5 பேரை காணவில்லை.
தென்மேற்கு சீனாவின் கைஜோ மாகாணத்தில் லுபான்ஷுய் நகரில் உள்ள ஜாங்கே டவுன்ஷிப்பில் அமைந்துள்ள ஜாங்கே ஆற்றில் பயணிகள் கப்பல் ஆற்றில் கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் ஐந்து பேர் காணாமல் போனதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் இந்த படகில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள். இந்த விபத்து மாலை 4:50 மணிக்கு ஏற்பட்டுள்ளது. இந்த படகில் 40 பேர் வரை பயணிக்க முடியும். மேலும், இந்த விபத்திலிருந்து 40 பேர் மீட்கப்பட்ட நிலையில் அவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர், இன்னும் ஐந்து பேரை காணவில்லை. மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.