நான் 7-வது படிக்கும் போதே எனக்கு பென்ஸ் காரை தந்தை வாங்கி தந்துள்ளார் : கே.சி.வீரமணி

Default Image

நான் ஆடம்பரத்தை விரும்பாதவன். கட்டிகட்டியாக தங்கம், வைரம் எனக்கு எதற்கு? வீடு கட்டுவதற்காக மணல் வாங்கி வைத்துள்ளதாகவும், அதற்கு அரசின் ரசீது இருப்பதாகவும் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். 

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், கே.சி.வீரமணி வருமானத்துக்கு அதிமாக சொத்து சேர்த்ததாக வேலூரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும், சென்னை, வேலூர், திருவண்ணாமலை, ஓசூர் உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீடுகளில் நடந்த சோதனையில் பணம், நகை, சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீட்டில் வேலூர் மாவட்ட கனிமவள உதவி இயக்குநர் பெர்னார்டு கடந்த 16-ம் தேதி இரவு 11 மணியளவில் ஆய்வு செய்தார். அங்கு 551 யூனிட் மணல் இருப்பதும், அதன் மதிப்பு ரூ.33 லட்சம் இருக்கும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, என்னிடமுள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார் நாற்பது ஆண்டுகள் பழமையானது. அதன் மதிப்பு 5 லட்சமே. நான் 7 வது படிக்கும் போதே எனக்கு பென்ஸ் காரை தந்தை வாங்கித் தந்துள்ளார்.  நான் ஆடம்பரத்தை விரும்பாதவன். கட்டிகட்டியாக தங்கம், வைரம் எனக்கு எதற்கு? வீடு கட்டுவதற்காக மணல் வாங்கி வைத்துள்ளதாகவும், அதற்கு அரசின் ரசீது இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்