#CSKvsMI: ருதுராஜ் அதிரடி… மும்பைக்கு 157 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 157 ரன்களை வெற்றி இலக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயம்.

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. துபாயில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரராக டுப்ளெஸ்ஸி, ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர்.

ஆனால் முதல் ஓவரிலேயே டுப்ளெஸ்ஸி எடுக்காமல் விக்கெட்டை இழக்க , அடுத்து களமிறங்கிய மெயின் அலியும் ரன் எடுக்காமல் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய அம்பத்தி ராயுடு ஆடம் மில்ன் வீசிய அதிவேக பந்து அம்பத்தி ராயுடு இடது முழங்கையில் பட்டதால் களத்திலிருந்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ரெய்னா வந்த வேகத்தில் ஒரு பவுண்டரி விளாசி விக்கெட்டை இழந்தார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் மைதானத்தில் கேப்டன் தோனியை கண்ட ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அடுத்தடுத்த சென்னை அணி விக்கெட்டுகளை இழக்க, ருதுராஜ் மற்றும் ஜடேஜா ஜோடி நிதானமாக விளையாடி சென்னை அணியை மீட்டெடுத்தனர். ருதுராஜ் அரைசதத்தை கடக்க, ஜடேஜா 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, களமிறங்கிய பிராவோ அதிரடி சிக்ஸர்களை அடித்து வெளியேறினார். இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை அடித்துள்ளது. அதிகபட்சமாக ருதுராஜ் 58 பந்துகளில் 88* ரன்களை அடித்து, இறுதி வரை களத்தில் இருந்தார்.

இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 157 ரன்களை இலக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயம் செய்துள்ளது. மும்பை அணி சார்பாக ட்ரெண்ட் போல்ட், ஆடம் மில்னே, ஜஸ்பிரித் பும்ரா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்துள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்