டாஸ் வென்று முதலில் களமிறங்கும் சென்னை…!

Default Image

டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலையால் நடந்துகொண்டிருந்த ஐபிஎல் போட்டி நிறுத்தப்பட்டது. இதனால், நான்கு மாதங்களுக்குப் பின் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.

இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

சென்னை அணி வீரர்கள்: 

டு பிளெசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், மெயின் அலி, ரெய்னா, ராயுடு, எம்.எஸ் தோனி,  ஜடேஜா, பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஹேசில்வுட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மும்பை அணி வீரர்கள்: 

குயின்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), அன்மோல்பிரீத் சிங், கீரான் பொல்லார்ட் (கேப்டன்) திவாரி, க்ருனால் பாண்டியா, ஆடம் மில்னே, ராகுல் சாஹர், பும்ரா, ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், மும்பை அணி 19 போட்டிகளிலும், சிஎஸ்கே 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tn
axar patel Ruturaj Gaikwad
myanmar earthquake
rishabh pant sanjiv goenka
mk stalin assembly
rishabh pant lsg
delhi parliament assembly