மனிதத் தவறால் உயிர்காக்கும் மருத்துவருக்கு ஏற்பட்ட மரணம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் – அண்ணாமலை

Default Image

அன்னவாசல் டாக்டர் சத்யா திறமையான மருத்துவர் சாலையில் தேங்கிய மழை நீரில் மூழ்கிய மரணமடைந்தார் என்ற செய்தி மனதை உலுக்கியது.

புதுக்கோட்டை மாவட்டம் பொம்மாடிமலையிலிருந்து துடையூர் செல்லக்கூடிய சாலையில் சுரங்கப்பாதை போன்று ரயில்வே பாலம் அமைக்கப்பட்டுள்ளது இந்நிலையில் அங்கு பெய்த கனமழையால் அந்த தரைதளத்தில் தண்ணீர் தேங்கி இருந்துள்ளது. அங்கு 50 அடி அளவுக்கு தண்ணீர் தேங்கி இருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அந்த பாலம் வழியாக அரசு மருத்துவமனையில் பணியாற்றும் சத்யா என்ற பெண் மருத்துவர் அவரது மாமியாருடன் சென்றுள்ளார்.  அந்த தண்ணீரினுள் கார் மூழ்கியதையடுத்து, கார் செயல்படவில்லை. அவரது மாமியார்  வெளியேறி நீச்சலடித்து தண்ணீரை விட்டு வெளியே வந்த நிலையில், சத்யாவால் வெளியே வர இயலவில்லை.

நீரில் இருந்து வெளியேற முடியாமல் தவித்த அரசு மருத்துவர் சத்யா மூச்சுத்திணறி  உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து, கோட்டாட்சியர் தலைமையிலான பேச்சுவார்த்தையில் ரயில்வே சுரங்க பாதையை மூடுவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அன்னவாசல் டாக்டர் சத்யா திறமையான மருத்துவர் சாலையில் தேங்கிய மழை நீரில் மூழ்கிய மரணமடைந்தார் என்ற செய்தி மனதை உலுக்கியது. மனிதத் தவறால் உயிர்காக்கும் மருத்துவருக்கு ஏற்பட்ட மரணம் தவிர்க்கப்பட்டிருக்கலாம். இனி இத்தகைய தவறுகள் நடக்காதிருக்க சமூக அக்கறையோடு நாம் செயல்படுவோம்’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்