ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு – 3 பேர் பலி; 21 பேர் காயம்!

ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த அடுத்தடுத்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 21 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் மற்றும் அந்நாட்டிலிருந்த பிற நாட்டு மக்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி உள்ளனர்.
இதனையடுத்து, ஆப்கானிஸ்தான் காபூல் நகரில் உள்ள பி.டி.13 பகுதியில் சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்று நேற்று வெடித்தது. இந்த சம்பவத்தில் 2 பேர் காயமடைந்த நிலையில், நங்கர்ஹார் மாகாணத்தின் ஜலாலாபாத் நகரில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 21 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்த நிலையில், காயமடைந்தவர்களில் இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் 3 பேர் பொதுமக்கள் எனவும், மற்றவர்கள் அனைவரும் தலிபான்கள் எனவும் அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.