#BREAKING: உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் ..!
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்களை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு.
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் செப்டம்பா் மாதம் 15 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து, 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபா் 6, 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், 9 மாவட்டங்களுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேர்தல் பார்வையாளர்களை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு. pic.twitter.com/67hT4P1HQL
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) September 18, 2021