ஆளுநர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாத திருமாவளவன்…! என்ன காரணம்…?

தமிழக புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதா திருமாவளவன். 

தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் அண்மையில் பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையில், நாகாலாந்து மாநில ஆளுநராக இருந்த ரவீந்திர நாராயண ரவியை தமிழக ஆளுநராக குடியரசுத் தலைவர்  நியமித்தார்.

இந்நிலையில், இன்று சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் வைத்து காலை 10.30 மணியளவில் தமிழகத்தின் 26-வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் மு.அப்பாவு, தலைமைச் செயலாளர், அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர் வரவில்லை. இதுகுறித்து விளக்கமளித்த திருமாவளவன் அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் என்கின்ற முறையில் எனக்கு அழைப்பு வந்தது.

ஆனால், இந்த ஆளுநரை நியமித்ததில் நான் மாற்று கருத்து கொண்டவன். இவர் மீது கடுமையான விமர்சனங்கள் உள்ளது என்பதை ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளேன். இந்த நிலையில், அந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.