எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேறிய ராஜஸ்தான் குழந்தை திருமணங்களை பதிவு செய்வதற்கான மசோதா..!
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், ராஜஸ்தானில் குழந்தை திருமணங்களை பதிவு செய்வதற்கான மசோதாவை ராஜஸ்தான் சட்டசபை நிறைவேற்றியுள்ளது.
ராஜஸ்தான் சட்டசபை வெள்ளிக்கிழமை குழந்தை திருமணங்கள் உட்பட திருமணங்கள் அனைத்தும் கட்டாயமாக பதிவு செய்வதற்கான 2009 சட்டத்தை திருத்தும் மசோதாவை 2021 இல் நிறைவேற்றியது.
இதனால் பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர் மற்றும் குழந்தை திருமணங்களை பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கு மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் அரசு, 2006 -ம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்புடன் இந்த மசோதா ஒத்துப்போகிறது என்று கூறியுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் சட்டசபைக்கு இது ஒரு கருப்பு நாளாக இருக்கும் என்றும், இந்த குழந்தை திருமணங்களை ஒருமனதாக அனுமதிக்க சட்டமன்றம் அனுமதிக்கிறதா? என்றும் பாஜக எம்எல்ஏ அசோக் லஹோட்டி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.