இரட்டை வேடத்தில் மிரட்ட வருகிறார் SK.! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

Default Image

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்திற்கான தகவல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் டாக்டர் , அயலான் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸாக தயாராகவுள்ளது.

Doctor

இதில் டாக்டர் படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேஜேஆர் ஸ்டுடியோஸ் அறிவித்திருந்தது.

ayalan

இதைபோல் இயக்குனர் ஆர்.ரவிக்குமார்  இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “அயலான்”. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ரகுல் பிரீத்தி சிங் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறு விறுவென நடந்து வருகிறது.

இதனையடுத்து தற்போது அட்லீயின் உதவி இயக்குனரான சிபி சர்க்கரவர்த்தி இயக்கத்தில் “டான்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் அட்லீயின் உதவி இயக்குனர் அசோக் என்பவரது இயக்கத்தில் தந்தை – மகன் என இரு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

singa pathai sivakarthikeyan 2

 

இப்படத்தையும் கேஜெஆர்ஸ்டுடியோஸ் தயாரிக்கவுள்ளதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் படத்திற்கு சிங்கப்பாதை என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்