உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்படுவதை தடுக்க வேண்டும் – மாநில தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை!

Default Image

உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்படுவதை தடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் மாநில தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் மீதம் உள்ள 28 மாவட்டங்களில் காலியாக உள்ள பதிவுகளுக்கு தற்செயல் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெறும் என்று தமிழநாடு தேர்தல் ஆணையம் அறிவித்தைதை அடுத்து, இதற்கான வேட்புமனு நேற்று முன்தினம் முதல் பெறப்பட்டு வருகிறது.வேட்புமனு தாக்கல் 22ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த நிலையில் உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்படுவதை தடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் மாநில தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிடங்கள் ஏலம் விடப்படுவதாக நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தேர்தல் ஆணையம் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அரசியல் அமைப்பு சட்டத்திற்கும், மக்களாட்சி தத்துவத்திற்கும் புறம்பாக நடைபெறும் இத்தகைய செயல்கள் மிகவும் கண்டித்தக்கது மட்டுமின்றி, தண்டனைக்குரியது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பதவியிடங்கள் இவ்வாறு ஏலம் விடுவது மக்களின் உணர்வுகளுக்கு ஊறுவிளைவிக்கும் செயல் என்பதால் ஜனநாயகத்திற்கு ஊறுவிளைவிப்பதை தடுத்திட மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகம்  சட்டபூர்வ நடவடிக்கைகள் வேண்டும்.

இத்தகைய நிகழ்வுகள் ஜனநாயகத்திற்கு எதிரானவை என்பதனை மக்கள் உணரச் செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழா வண்ணம் தக்க முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆணையிட்டுள்ளது.

மேலும், உள்ளாட்சி தேர்தல்கள் மூலம் தேர்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி கிராமப்புற மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஜனநாயக முறைப்படி தேர்தடுக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதால் தேர்தல் அறிவிக்கப்பட்ட பதவியிடங்கள் அனைத்தும் தேர்தல் மூலம் நிரப்பிட அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்