“பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்” – முதல்வர் ஸ்டாலின்..!
பிரதமர் நரேந்திர மோடியின் 71-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு,முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 71-ஆவது பிறந்தநாளான அவரது பிறந்தநாள் இன்று, பாஜகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக பாஜகவினர் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த பணியில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும்,சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்கள், பிரதமர் நரேந்திர மோடியின் 71-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 710 கிலோ மீன்களை அப்பகுதி மக்களுக்கு இலவசமாக வழங்கினார்.
அதுமட்டுமல்லாமல்,அரசியல் மற்றும் திரைப்பிரபலங்கள்,கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் பிரதமருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,பிரதமர் மோடி அவர்களுக்கு,தமிழக முதல்வர் ஸ்டாலின் டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது:”நமது மாண்புமிகு பிரதமர் திரு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.பிரதமர் மோடி அவர்கள் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.
Birthday greetings to our Hon’ble Prime Minister Thiru @narendramodi. Wishing him a long and healthy life.
— M.K.Stalin (@mkstalin) September 17, 2021