பாலியல் வழக்கில்..,, செனட் குழு முன் அழுத சிமோன் பைல்ஸ்..!
பாலியல் வழக்கு விசாரணையில் அழுத உலகின் சிறந்த ஜிம்னாஸ்டிக் சிமோன் பைல்ஸ்
உலகின் சிறந்த ஜிம்னாஸ்டிக் வீரர்களில் ஒருவரான அமெரிக்க பெண் ஜிம்னாஸ்ட் வீராங்கனை சிமோன் பைல்ஸ் மற்றும் அவரது முன்னாள் அணியினர் அலி ரைஸ்மேன் மற்றும் மெக்கெய்லா மரோனி ஆகியோர் முன்னாள் குழு மருத்துவர் லாரி நாசர் பாலியல் துன்புறுத்தல்களை கொடுத்ததாக இவர் கடந்த 2017-இல் சிறையில் அடைக்கப்பட்டார்.
2017 இல் லாரி நாசருக்கு 60 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் மீடூவின் கீழ் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டினர். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகு, இரண்டு வெவ்வேறு நீதிமன்றங்கள் 175 மற்றும் 125 ஆண்டுகள் சிறைத்தண்டனை லாரி நாசருக்கு விதித்தன. பின்னர் நாசர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார். ஆனால் நீதிபதி அவர் தனது வாழ்நாள் முழுவதையும் ஒரு சிறைச்சாலையில் கழிப்பார் என்று கூறினார்.
சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நாசரின் வழக்கில் அமெரிக்க காவல் துறை( FBI) இன் விசாரணையில் உள்ள குறைபாடுகளை செனட் குழு விசாரித்து வருகிறது. இந்நிலையில், 7 ஒலிம்பிக் பதக்கங்கள் மற்றும் 25 உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களை வென்றுள்ள அமெரிக்க ஜிம்னாஸ்ட் சிமோன் பைல்ஸ் FBI இன் விசாரணையில் பேசியபோது, மருத்துவர் நாசர், என்னைப்போன்ற 300-க்கும் மேற்பட்ட வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார்.
இதுகுறித்து புகார்கள் அளிக்கப்பட்ட போதும், அமெரிக்க காவல் துறை மற்றும் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் சமேளனமும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆதாரங்களை மூடி மறைத்தனர். அப்போது சிமோன் பைல்ஸ் திடீரென கண்கலங்கினார். பாலியல் குற்றச்சாட்டிற்காக இந்த இடத்தில் நான் அமர்ந்திருக்கிறேன். இதனை விட கொடுமையான இடத்தை உலகத்தில் எங்கும் நான் உணரமாட்டேன் என கூறினார்.