தேசிய மாணவர் படையை மேம்படுத்த அமைக்கப்பட்ட குழுவில் தோனி, ஆனந்த் மஹிந்திரா ..!

தேசிய மாணவர் படையை மேம்படுத்த அமைக்கப்பட்ட 15 பேர் கொண்ட குழுவில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தேசிய மாணவர் படையை மேம்படுத்த 15 பேர் கொண்ட குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், முன்னாள் எம்பி பைஜயந்த் பாண்டா உயர்மட்ட ஆய்வு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவில் உறுப்பினர்களாக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தேசிய மாணவர் படைச் சட்டம் மூலம் 1948-ஆம் ஆண்டு 16 ஜூலை அன்று என்சிசி உருவாக்கப்பட்டது. அதன் நோக்கம் இளைஞர்களுக்கு பாதுகாப்பு மற்றும் ஒழுக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். பள்ளி மற்றும் கல்லூரி அளவிலான மாணவர்கள் இதில் பங்கேற்கலாம். பண்டிட் ஹேமவதி குன்ஸ்ரு தலைமையிலான குழு தேசிய அளவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் என்சிசி உருவாக்க ஒரு கேடட் அமைப்பை பரிந்துரைத்தது.
1952 இல் ஒரு விமானப் பிரிவு சேர்க்கப்பட்டது. நாட்டின் பாதுகாப்பு தேவைகளை கருத்தில் கொண்டு, 1962 இந்திய-சீனப் போருக்குப் பிறகு 1963 ஆம் ஆண்டில் மாணவர்களுக்கு NCC பயிற்சி கட்டாயமாக்கப்பட்டது.
என்சிசியில் மூன்று சான்றிதழ்கள்:
என்சிசியில் கேடட்கள் ஏ, பி மற்றும் சி சான்றிதழ்களைப் பெறுகிறார்கள். 8 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் A சான்றிதழ் வழங்கப்படுகிறது. பி சான்றிதழ் இடைநிலை மாணவர்களுக்கானது, சி சான்றிதழ் கல்லூரி அளவில் வழங்கப்படுகிறது.
என்சிசி சான்றிதழ் வைத்திருப்பவர்கள் குறிப்பாக பி மற்றும் சி சான்றிதழ் வைத்திருப்பவர்கள் அடுத்த வகுப்புகளுக்கான சேர்க்கையில் முக்கியத்துவம் பெறுகிறார்கள். உதாரணமாக, பி சான்றிதழ் பெற்ற 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பட்டப்படிப்பில் 2 சதவீத வெயிட்டேஜ் மற்றும் பட்டப்படிப்பில் சான்றிதழ் பெற்ற முதுகலை மாணவர்களுக்கு 3 சதவீத வெயிட்டேஜ் பெறுவார்கள்.
இது தவிர, பல அரசு துறைகளின் வேலைகளிலும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சி சான்றிதழ் பெற்றவர்கள் ராணுவம் மற்றும் காவல் கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பில் சலுகை வழங்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!
February 25, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025