கோடியில் ஒருவன் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்.! – விஜய் ஆண்டனி..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கோடியில் ஒருவன் குடும்பத்துடன் பார்க்கவேண்டிய படம் என விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று ‘கோடியில் ஒருவன்’. இந்த படத்தை “மெட்ரோ” படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இந்த படத்தினை இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த திரைப்படம் நாளை முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இந்த படம் குறித்து பேசிய விஜய் ஆண்டனி, ” கோடியில் ஒருவன் படம் கண்டிப்பாக நல்லா இருக்கும்… குடும்பத்துடன் போய் பாருங்க.. ரொம்ப நாளுக்கு பிறகு எனது படம் வெளியாகிறது.. எனது ரசிகர்கள், என்னை ஆதரிக்கும் மக்கள் அனைவரும் திரையரங்கில் படம் பாருங்கள்.. ஒரு முறை பாருங்கள் கண்டிப்பாக உங்களை ஊக்குவிக்கும்” என தெரிவித்துள்ளார்.
இந்த திரைப்படத்திலிருந்து வெளியான டீசர், பாடல்கள், டிரைலர் என வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. நாளை படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தை பார்க்க அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.