அனைத்துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை!

தமிழக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து அனைத்துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை.
நடந்த முடிந்த தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
சட்டப்பேரவையில் காவலர்களுக்கு நல ஆணையம், ஆதிதிராவிடர் நல ஆணையம் நகைக்கடன் தள்ளுபடி, அரசு ஊழியர்களுக்கான அறிவிப்புகள் என பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
துறை ரீதியாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் விவரம் மற்றும் எத்தனை திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்பது குறித்து ஆலோசித்து, முக்கிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.