“மாணவச் செல்வங்களே,கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்; ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள்” – முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ..!

Default Image

நீட் எனும் அநீதியை ஒழிக்கும்வரை நாம் ஓயமாட்டோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கடந்த 12-ஆம் தேதி மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை இந்தியா முழுவதும் 16 லட்சம் மாணவர்கள் எழுதினர். அதில் தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினார்கள். இந்நிலையில், நீட் தேர்வு தொடங்குவதற்கு முன்பதாகவே, தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

அதனை தொடர்ந்து, நீட் தேர்வு எழுதி முடித்த பின் தோல்வி பயத்தால், நேற்று கனிமொழி என்ற மாணவியும், இன்று சௌந்தர்யா என்ற மாணவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். மாணவர்கள் தைரியமாக இருக்குமாறும், விபரீதமான முடிவுகளை எடுக்க வேண்டாம் என்றும் அரசியல் பிரபலங்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.

இந்நிலையில்,மாணவச் செல்வங்களே! மனம்தளராதீர்கள்! கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்; ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள்! கல் நெஞ்சங்கொண்டோரைக் கரைப்போம்!NEET எனும் அநீதியை ஒழிக்கும்வரை நாம் ஓயமாட்டோம் என்று முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொலியில் கூறியதாவது:

“கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாணவி அனித்தா இறந்தபோது என்ன மனநிலையில் இருந்தேனோ? அதே மனநிலையில் தான் தற்போதும் இருக்கிறேன்.

சனிக்கிழமை சேலத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டபோது,இனி இப்படி ஒரு துயரம் நடக்க கூடாதென்று மாணவச் செல்வங்களை கேட்டுக் கொண்டேன்.

எனினும்,நேற்று அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கனிமொழி என்ற மாணவியும், இன்று வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சௌந்தர்யா என்ற மாணவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.இந்த செய்தியை கேள்விப்பட்டதும் நான் சுக்கு நூறாக உடைந்து போயிட்டேன்.இப்போது எனக்கு இருக்க வேதனையை விட இனி இப்படி ஒரு துயரம் நடக்க கூடாது என்ற கவலைதான் அதிகமாக இருக்கிறது.அந்த அக்கறையோடுதான் உங்களிடம் பேசுகிறேன்.பல தலைமுறையாக மறுக்கப்பட்டு வந்த கலவிக்கதவு இப்போதுதான் கொஞ்சம் திறந்து உள்ளது.அதையும் இழுத்து மூடும் செயலாகத்தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது.

படிக்க தகுதி தேவை இல்லை.படித்தால் தன்னாலேயே தகுதி வந்துவிடும்.பல குளறுபடிகளைக் கொண்ட நீட் தேர்வு,ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கனவை நாசமாக்குகிறது என்று திமுக கழகம் பல்வேறு போராட்டங்களை நடத்தியது.அதற்கு முன்னாடி,திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோதும்கூட நீட் தேர்வை நடத்த விடவில்லை.அனாலும்,சிலர் தங்களுடைய சுயலாபத்திற்காக,இந்த தேர்வை தமிழகத்துக்குள் அனுமதித்தார்கள்.சிலர் இப்போதும் இந்த அநீதி தொடர வேண்டும் என்று பல பொய்யான பரப்புரைகளை செய்கிறார்கள்”,என்று கூறியுள்ளார்.

மேலும்,அவர் கூறுகையில்:”பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளுக்கு அளவுக்கு மீறி அழுத்தங்கள் தர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.ஆசிரியர்கள்,திரைத்துறையினர் உள்ளிட்டோர் மாணவச் செல்வங்களுக்கு தன்னம்பிக்கை விதையை விதைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.தயவு செய்து,மாணவர்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் கெஞ்சிக் கேட்கிறேன்”,என்று பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்