கால்பந்து விளையாடும் தாய் மற்றும் குட்டி கரடி..!வைரல் வீடியோ..!
தாய் கரடி மற்றும் அதன் குட்டி இரண்டும் இணைந்து கால்பந்து விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒடிசா மாநிலத்தில் உள்ள நப்ரங்பூர் மாவட்டத்தில் இருக்கும் காட்டுப்பகுதியில் தாய் மற்றும் அதன் குட்டி கரடி இணைந்து கால்பந்து விளையாடும் காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அம்மாவட்டத்தின் உமர்கோட் பகுதியில் சிறுவர்கள் சிலர் கால்பந்து விளையாடி கொண்டிருந்துள்ளனர். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக பந்து காட்டு பகுதிக்குள் சென்று விழுந்துள்ளது.
அப்போது அங்கிருந்த இரண்டு கரடிகள் பந்தை பார்த்தவுடன் விளையாட தொடங்கியுள்ளது. முதலில் பந்தை கண்டு பயந்தாலும், பின்னர் சிறுவர்கள் காலால் பந்தை உதைத்து விளையாடிய அதே முறையில் தாய் மற்றும் குட்டி கரடிகள் விளையாடியுள்ளது. இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்ட நிலையில், இந்த வீடியோ சமூக இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Sea How
Two wild bears were seen playing football without any fear.This videofrom Sukigaon in Umarkot area of Nabarangpur district, Odisha#MumbaiIndians #HindiDiwas #हिंदी_दिवस #AskAakash pic.twitter.com/rUoWy3tTw2
— Abhimanyu Aanand (@AbhimanyuAanand) September 14, 2021