இந்த மாதத்தில் கோவாக்சின் தடுப்பூசிக்கு WHO ஒப்புதல் அளிக்க வாய்ப்பு…!
இந்த மாதத்தில் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
உலகம் முழுவதிலும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸுக்கு எதிராக பல்வேறு நாடுகளிலும் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்தியாவிலும் கோவிஷீல்ட், கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகளுக்கு அவசர கால அடிப்படையில் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மேலும், அமெரிக்காவில் பயன்படுத்தப்படக் கூடிய ஃபைஸா், ஜான்சன் & ஜான்சன், மாடா்னா மற்றும் சீனாவில் பயன்படுத்தப்படும் சைனோபார்ம், பிரிட்டனில் பயன்படுத்தப்படும் கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார அமைப்பு அவசர கால அடிப்படையில் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. ஆனால் இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்நிலையில் இந்த தடுப்பூசி தான் நாடு முழுதும் பலருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க தேவையான ஆவணங்களை உலக சுகாதார அமைப்பிடம் பாரத் பயோடெக் நிறுவனம் வழங்கியுள்ளதாக கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், கோவாக்சின் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு இந்த மாதம் உலக சுகாதார அமைப்பு அனுமதியளிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.