“நாங்க வேற மாறி” பாடல் படைத்த சாதனை.! கொண்டாடும் தல ரசிகர்கள்.!!
வலிமை திரைப்படத்திலிருந்து வெளியான நாங்க வேற மாறி பாடல் புதிய சாதனை படைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார் தற்போது வலிமை எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதிரடி ஆக்சன் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய ஹெச்.வினோத் இயக்குகிறார்.
இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹீமா குரேஷி நடித்துள்ளார். தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து படத்தை தீபாவளிக்கு வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான இறுதிக்கட்ட பணிகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக, கடந்த ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதி படத்தின் முதல் பாடலான “நாங்க வேற மாறி” பாடல் வெளியானது.
இந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுத, இசையமைப்பாளர் யுவன் மற்றும், பாடகர் அனுராக் குல்கர்னி இருவரும் இணைந்து பாடியுள்ளனர். வெளியான நாளிலிருந்து இந்த பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அதில் வரும் பாடல் வரிகள் தனது ரசிகர்களுக்கு அஜித் கூறுவது போல் அமைந்ததால் பாடல் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டது.
இந்த நிலையில், தற்போது இந்த பாடல் யூடியூபில் 25மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. 25 மில்லியன் பார்வையாளர்கள் மற்றும் 1.3மில்லியன் லைக்குகளை இந்த பாடல் பெற்றுள்ளது. முதல் பாடலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து விரைவில் இரண்டாம் பாடலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.