பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு…!
பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு.
பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, ஆன்லைன் மூலம் சுமார் 1 லட்சத்து 74 ஆயிரத்து 930 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதனை எடுத்து பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், தற்போது இன்று தரவரிசை பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க கட்டணம் செலுத்திய 1 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து https://t.co/nPVCskklf7 இந்த இணையதளத்தில் தங்களுடைய கட் ஆஃப் மதிப்பெண்களை தெரிந்துகொள்ளலாம்.