எண்ணெய் சருமம் மற்றும் முகப்பருக்கள் உள்ளவர்களா நீங்கள்…? இயற்கை முறையில் மாஸ்க் தயாரிக்கலாம் வாருங்கள்..!
பெரும்பாலும் எண்ணெய் சருமம் உள்ளவர்கள் தங்கள் முகத்தில் உடனடியாக அழுக்கு சேர்ந்து விடுவதாக கவலைப்படுகிறார்கள். எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு விரைவில் முகப்பருக்களும் ஏற்பட்டுவிடும். இதற்காக செயற்கையாக கடைகளில் கிடைக்கும் கிரீம்களை வாங்கி உபயோகிப்பதால் நமது பணம் தான் விரையமாகும். ஆனால் முழுமையான தீர்வு கிடைக்காது. இன்று வீட்டிலேயே எளிமையான முறையில் இயற்கையாக எப்படி எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கான மாஸ்க் தயாரிப்பது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
எலுமிச்சை + தயிர்
நன்மைகள் : எலுமிச்சை சாறு முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கை நீக்குவதிலும் எலுமிச்சை பெரிதும் உதவுகிறது.
உபயோகிக்கும் முறை : இரண்டு ஸ்பூன் தயிரில், 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக பேஸ்ட் போல கலந்து முகத்தில் தடவவும்.
இடைப்பட்ட காலம் : முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தைக் கழுவ வேண்டும். இதை வாரத்துக்கு இரண்டு முதல் மூன்று முறை பயன்படுத்தலாம்.
கடலை மாவு + தயிர்
நன்மைகள் : எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு கடலைமாவு ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். இந்த கடலை மாவை முகத்தில் தடவி வந்தால், விரைவில் முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கு நீங்கும்.
உபயோகிக்கும் முறை : கடலை மாவுடன் சிறிதளவு தயிர் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல தயாரிக்கவும். இந்த பேஸ்டை முகத்தில் பூசிக்கொள்ளவும்.
இடைப்பட்ட காலம் : இதனை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவவும். இதனை தினமும் உபயோகிக்கலாம்.
வாழைப்பழம் + எலுமிச்சை
நன்மைகள் : முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க வாழைப்பழம் உதவுவதுடன், முகத்திற்கு இயற்கையான பளபளப்பு தன்மையை கொடுத்து, முகத்திலுள்ள அழுக்குகளை நீக்குவதற்கு உதவுகிறது.
உபயோகிக்கும் முறை : வாழைப்பழத்தை நன்றாக மசித்து எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும். இதனை முகத்தில் அப்படியே தடவவும்.
இடைப்பட்ட காலம் : இந்த மாஸ்க்கை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். இதனை வாரம் 2 முறை உபயோகிக்கலாம்.
ஓட்ஸ் + எலுமிச்சை
நன்மைகள் : ஓட்ஸ் எண்ணெய் சருமம் உள்ளவர்கள் பயன்படுத்துவதற்கு மிகவும் சிறந்தது. இதனை முகத்தில் தடவி வந்தால், முகப்பருக்கள் நீங்குவதற்கும் பெரிதும் உதவுகிறது.
உபயோக்கும் முறை : ஓட்ஸை வெந்நீரில் கலந்து நன்றாக மசித்து எடுத்துக் கொள்ளவும். அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து மாஸ்க் போல தயாரித்து முகத்தில் தடவவும்.
இடைப்பட்ட காலம் : முகத்தில் தடவி 15 முதல் 30 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை சாதாரண தண்ணீரால் கழுவவும்.