பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதி!
ரஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பரோலில் உள்ள பேரறிவாளன் விழுப்புரம் மருத்துவமனையில் அனுமதி.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பரோலில் வந்த பேரறிவாளனுக்கு சிறுநீரக தொற்று, வயிற்று வலி காரணமாக விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு, அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த ஏப்ரல் மாதம் கோரிக்கை விடுத்தார்.
இதை பரிசீலித்த தமிழக அரசு, பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியது. அதன்படி கடந்த மே மாதம் 28ம் தேதி ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு பேரறிவாளன் சென்றார். சிறுநீரக தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு பேரறிவாளன் மருத்துவ சிகிச்சை எடுத்து வருவதாக கூறப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பேரறிவாளனின் பரோல் முடிந்தும், மீண்டும் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் பரோலில் உள்ள பேரறிவாளன் சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு விழுப்புரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.