ஆண்கள் இல்லாத வகுப்பறைகளில் பெண்கள் படிக்கலாம்..!-தலிபான்கள்
ஆண்கள் இல்லாத வகுப்பறைகளில் பெண்கள் படிக்கலாம் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில், தொடர்ச்சியாக அந்நாட்டில் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. மேலும், பெண்கள் கல்வி கற்பதற்கும் விளையாட்டுகளில் பங்கேற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்களுக்கு மந்திரி சபையிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசின் கல்வித்துறை மந்திரி அப்துல் பாகி ஹக்கானி பெண்களின் உயர்கல்வி குறித்து புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, பெண்கள் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி கற்கலாம். ஆனால், அங்குள்ள வகுப்பறைகள் பாலின அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கும். ஆண்கள் இல்லாத வகுப்பறைகளில் பெண்கள் படிக்கலாம். பெண்கள் கட்டாயமாக இஸ்லாமிய உடைகளை அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.