தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு உத்தரவு!

Default Image

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, ஒருமக்கம் திட்டங்கள், தேர்தல் வாக்குறுதிகள், கொரோன என்று இருந்தாலும், மறுபக்கம் ஐபிஎஸ், ஐஏஎஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்வது, புதிய அதிகாரிகளை நியமிப்பது என தமிழக அரசு பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது. இதுபோன்ற முடிவுகளை பலர் வரவேற்பு அளித்தாலும், எதிரிக்கட்சிகள் குற்றசாட்டி வருகிறது.

அந்தவகையில் தற்போது தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், சென்னை பெருநகர கிழக்கு போக்குவரத்து துணை ஆணையர் கே.பாலகிருஷ்ணன், திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.யாக இருந்த சிபி சக்ரவர்த்தி சென்னை சைபர் குற்றப்பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை சைபர் குற்றப்பிரிவு எஸ்.பி.யாக இருந்த ஓம்பிரகாஷ் மீனா சென்னை பெருநகர் கிழக்கு போக்குவரத்து துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளராக ஜி.சந்தீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சப் டிவிஷன் துணை காவல் கண்காணிப்பாளராக ரஜத் ஆர் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சப் டிவிஷன் துணை காவல் கண்காணிப்பாளராக அங்கித் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சப் டிவிஷன் துணை காவல் கண்காணிப்பாளராக வி.வி.சாய் பிரணீத் நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சப் டிவிஷன் துணை காவல் கண்காணிப்பாளராக அபிஷேக் குப்தா, திண்டுக்கல் மாவட்டம் கிராமப்புறம் துணை காவல் கண்காணிப்பாளராக அருண் கபிலன் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்