சட்டமன்றத்தில் ரொம்ப நேரம் உட்கார முடியவில்லை – எம்எல்ஏ, உதயநிதி ஸ்டாலின்
திமுக ஆட்சியை, அதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் பாராட்டுவதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை அருகே கோவில்பட்டியில் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின், தமிழக சட்டமன்றத்தில் ஒவ்வொரு நாளும் விதி எண் 110-ன் கீழ் முத்தான அறிவுப்புகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார்.
ஒட்டுமொத்த தமிழக மக்களும் மகிழ்ச்சியடையும்படி பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளார். சட்டமன்றத்தின் என்னால் ரொம்ப நேரம் உட்கார முடியவில்லை. ஏனென்றால், யாரும் எதிர்த்து பேசமாட்டிக்கிறார்கள். திமுக ஆட்சியை, அதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் பாராட்டுவதாக தெரிவித்தார்.
அதில் குறிப்பாக, அதிமுகவின் எஸ்பி வேலுமணி, எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் திமுகவின் ஆட்சியை பாராட்டி பேசுகிறார்கள். அந்த அளவுக்கு தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.