சூப்பர் ஸ்டாரை நேரில் சந்தித்த ஷங்கர் மகள் அதிதி.!
நடிகர் ரஜினிகாந்த்தை இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி நேரில் சந்தித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என அழைக்கப்படுபவர் ஷங்கர். இவரின் இளைய மகள் அதிதி தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார். அதாவது கார்த்தி – முத்தையா இணையும் விருமன் படத்தின் மூலம் அதிதி நடிகையாக அறிமுகமாகிறார்.
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஷங்கர் -ராம்சரண் கூட்டணியில் உருவாகும் படத்தின் பூஜையில் மாடன் உடையில் வந்து அதிதி கலந்து கொண்டார். அதற்கான புகைப்படங்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், கதாநாயகியாக அறிமுகமாகவுள்ள ஷங்கர் மகள் அதிதி சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளார். அதற்கான புகைப்படமும் சமூக வளைத்தளத்தில் வைரலாகி வருகிறது.