குஜராத்தில் 3 மணிக்கு பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்..!

குஜராத்தில் இன்று மதியம் 3 மணிக்கு பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.
பாஜகவை சேர்ந்த விஜய் ரூபானி கடந்த 2016-ம் ஆண்டு முதல் முதல்வராக இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று திடீரென ஆளுநரை சந்தித்து விஜய் ரூபானி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குஜராத்தின் வளர்ச்சி பணிபுரிய ஆற்றலுடனும், உற்சாகத்துடனும் புதிய தலைமையின் கீழ் நோக்கி செல்ல வேண்டும். இதனை மனதில் வைத்து தான் பதவி விலகினேன் என தெரிவித்தார்.
இந்நிலையில், குஜராத்தில் இன்று மதியம் 3 மணிக்கு பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அமைச்சர்கள் நரேந்திரசிங் தோமர், பிரகலாத் ஜோஷி ஆகியோர் பார்வையாளர்களாக பங்கேற்கின்றனர். குஜராத் முதல்வர் பதவியை விஜய் ரூபானி ராஜினாமா செய்த நிலையில் பாஜக எம்எல்ஏ கூட்டம் நடைபெறுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025