9/11 என்பது மனிதகுலத்தின் மீதான தாக்குதல்,இது ஒன்று மட்டுமே தீர்வு: பிரதமர் மோடி

Default Image

இன்று செப்டம்பர் 11 அதாவது 9/11! உலக வரலாற்றில் மனிதகுலத்தை தாக்கியதாக அறியப்பட்ட ஒரு தேதி,மனிதகுலத்திற்கான மதிப்புகள் மூலமே இது போன்ற தாக்குதல்களை தவிர்க்க முடியும் -பிரதமர் மோடி

கொடூரமான 9/11 இரட்டை கோபுர தாக்குதல் நடந்து இன்றுடன் 20 ஆம் ஆண்டு கடைபிடிக்கப்படுகிறது.இந்த தாக்குதல் பற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இது மனிதநேயத்தின் மீதான தாக்குதல் என்றும்,மனிதகுலத்திற்கான மதிப்புகளை புகுத்துவதன் மூலம் மட்டுமே இதுபோன்ற துயரங்களை தவிர்க்க முடியும் என்றார்.

“இந்த நாளில்,ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, செப்டம்பர் 11, 1893 அன்று, சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் நடைபெற்ற உலக மத பாராளுமன்றத்தின் உலகளாவிய மேடையில் இந்தியாவின் நற்குணங்களை உலகத்திற்கு அறிமுகப்படுத்தினார்,என்று  பிரதமர் மோடி கூறினார்.

மனிதகுலத்தின் இந்த மதிப்புகள் மூலம் மட்டுமே 9/11 போன்ற சோகங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பதை இன்று உலகம் உணர்ந்து கொண்டிருக்கிறது.
20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த நாளில் மொத்தமாக 2,977 பேர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தனர். செப்டம்பர் 11, 2001 அன்று, அமெரிக்கா அதன் வரலாற்றில் மிக மோசமான பயங்கரவாத தாக்குதலை எதிர்கொண்டது.

பயங்கரவாத தாக்குதல்களில் 3,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். வெறும் 102 நிமிட இடைவெளியில், நியூயார்க்கின் உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் அல்கொய்தா இயக்கத்தால் கடத்தப்பட்ட விமானங்களால் தகர்க்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
gold rate
AUSvsIND
Good Bad Ugly
Congress - BJP
Low pressure area
Valery Zaluzhny