அதிர்ச்சி…மேற்கு வங்க மாநில முன்னாள் முதலமைச்சரின் மைத்துனி பிளாட்பாரத்தில் வசிக்கிறாரா? …! ..!

Default Image

மேற்கு வங்க மாநில முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் (மைத்துனி) மனைவியின் சகோதரி இரா பாசு பிளாட்பாரத்தில் வசித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநில முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் மனைவியின் சகோதரி இரா பாசு,நரை முடியுடன் மெல்லிய,அழுக்கான நீல நிற நைட்டியுடன் மேற்கு வங்கத்தின் பராபஜார் பகுதியில் உள்ள டன்லோப்பின் தெருக்களில் சுற்றித் திரிவது கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கு வங்காள அரசாங்கத்தை நடத்திய இரா பாசு அவர்கள் வாழ்க்கை அறிவியல் ஆசிரியையாகவும் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள பிரியநாத் பெண்கள் உயர் நிலைப் பள்ளியில் 34 வருடங்கள் பணியாற்றியவர்.முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், கடந்த 2009 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு பாரா நகரில் வசித்து வந்தார். பிறகு கர்டா அருகில் உள்ள லிச்சு பகன் என்ற இடத்தில் வசித்து வந்தார்.அதன்பின்னர்,அவர் என்ன ஆனார் என்று தெரியாத நிலையில், தற்போது,டன்லப் பகுதியில், சாலையோரத்தில் வசித்து வருவது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து,இரா பாசு அவர்கள் சாலையோரத்தில் வசிப்பது பற்றிய செய்தி சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து,அவரை மாவட்ட நிர்வாகம் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த ஆசிரியர் தினத்தன்று டன்லப் தொழிலாளர்கள் அழைத்து அவரை கவுரவவித்தனர். அப்போது இதுதொடர்பாக பேசிய இரா பாசு, நான் என் சொந்த முயற்சியில் ஆசிரியை ஆனேன். முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் உறவினர் என்பதை பலர் அறிந்திருந்தாலும் எனக்கு எந்த விஐபி அடையாளமும் தேவையில்லை. மேலும்,அனைத்து ஆசிரியர்களும் என் மீது அன்பு செலுத்துகிறார்கள். பல மாணவர்கள் என்னை அடையாளம் வைத்துள்ளனர். சிலர் என்னை அணைக்கும்போது கண்ணீர் வடிக்கின்றனர்”, என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, பிரியநாத் பெண்கள் உயர் நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கிருஷ்ண காளி சந்தா கூறும்போது, அவருக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆவணங்களை சமர்பிக் கும்படி கேட்டிருந்தோம். அவர் சமர்பிக்கவில்லை. அதனால் அவருக்கு ஓய்வூதியம் கிடைக் கவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
Bumrah - Bhuvneshwar kumar
Vidaamuyarchi Trailer
Israel Hamas Ceasefire
SpaDex Docking - PM Modi
Train movie team wishes Vijay Sethupathi
gold price