Job Alert : NIACL நிறுவனத்தில் 300 காலிப்பணியிடம் அறிவிப்பு..!

Default Image

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்த்தில் 300 காலியிடங்கள்  வெளியிட்டுள்ளது.

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (என்ஐஏசிஎல்) இல் நிர்வாக அதிகாரி காப்பீட்டுத் துறையில் பணியாற்ற விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் NIACL AO 2021-க்கான மொத்தம் 300 காலியிடங்களை வெளியிட்டுள்ளது.

இந்த காலியிடங்களுக்கு செப்டம்பர் 1 முதல் ஆன்லைன் விண்ணப்பிக்கலாம். NIACL இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அதாவது newindia.co.in இல் விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 21-ஆம் நாள்  விண்ணப்பிக்க கடைசி தேதியாகும்.

வயது வரம்பு: 
விண்ணப்பதாரர் ஏப்ரல் 1, 2021 தேதியின்படி 30 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் ஏப்ரல் 2, 1991 க்கும்- ஏப்ரல் 1, 2000-க்கும் இடையில் பிறந்திருக்க வேண்டும்.

300 பணியிடங்கள்:

1.SC-46
2.ST-22
3.OBC – 81
4. EWS – 30
5.UR – 121

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு/முதுகலை பட்டப்படிப்பில்  குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் மற்றும் SC/ST/PWBD விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பு இறுதி ஆண்டு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆட்சேர்ப்பு:
கட்டம்1: ஆரம்பத் தேர்வு
கட்டம் 2: முதன்மைத் தேர்வு
கட்டம் 3 – நேர்காணல்

ஊதியம்:

குறைந்தபட்சம் ரூ.32,795 முதல் ரூ.60,000 வரை சம்பளம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்