5 மாத கர்ப்பமாக இருக்கும் போதே தடுப்பூசி போட்டுக்கொண்டேன்.! – நீலிமா விழிப்புணர்வு செயல்.!

Default Image

நடிகை நீலிமா ராணி கர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஊக்குவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகை நீலிமா ராணி கடைசியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரண்மனை கிளி சீரியலில் நடித்து வந்தார். பின்னர் சில காரணங்களலால் அதிலிரிருந்து விலகினார். சீரியல்களில் மட்டுமில்லாமல்,பண்ணையாரும் பத்மினியும், நான் மகான் அல்ல ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு இசைவாணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அதிதி என்ற பெண் குழந்தை உள்ளது. இதனை தொடர்ந்து, நீலிமா ராணி, தனது இரண்டாவது குழந்தையை ஜனவரி 2022 இல் வரவேற்கத் தயாராக இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், அடுத்ததாக 5 மாத கர்ப்பமாக இருக்கும் போதே தடுப்பூசி போட்டுக்கொண்டேன் என விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோவில் ” ரொம்ப முக்கியமான விஷயம் உங்க கிட்ட சொல்லுறேன்..நான் தற்போது ஐந்த மாதங்கள் கர்ப்பமாக உள்ளேன்.. இது உங்கள் எல்லாருக்கும் தெரியும். கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள முதலில் எனக்கு சற்று தயக்கமாக இருந்தது. மகப்பேறு மருத்துவர் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அவருடைய அறிவுரைக்கு ஏற்ப நான் இன்று என்னுடைய முதல் தவணை கொரோனா தடுப்பூசியை எடுத்து கொண்டேன். தயவு செய்து கர்ப்பனி பெண்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்னுக்கு வாருங்கள். அது நமக்கும் குழந்தைக்கும் நிச்சயம் பாதுகாப்பான ஒன்று” என விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Neelima Esai (@neelimaesai)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tamil news
mk stalin TVK VIJAY
Gujarat Titans vs Rajasthan Royals
donald trump Tax
Thirumavalavan VCK
Ghibli Cyber Crime
TN CM MK Stalin - TN BJP Leader Annamalai