விநாயகர் சதூர்த்தி கொண்டாட்டத்திற்கு தடை விதிப்பு – உத்தர பிரதேச அரசு!

உத்தர பிரதேச மாநிலத்தில் விநாயகர் சதூர்த்தி விழா கொண்டாடுவதற்கு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா பரவலை தவிர்க்கும் விதமாக பல்வேறு மாநிலங்களிலும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மக்கள் இந்த வருடம் வீட்டிலேயே விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் விநாயக சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கும், நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. மேலும் இந்த கொண்டாட்டத்தின் பொழுது பொது மக்கள் கூடுவதை தவிர்ப்பதற்காகத்தான் இவ்வாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் எனவும், மக்களின் மத நம்பிக்கைக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். எனவே, மக்கள் வீட்டிலேயே விநாயகர் சதுர்த்தி கொண்டாடலாம் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

author avatar
Rebekal