மகான் மகன் தாதா.. துருவ் விக்ரமின் போஸ்டர் ரீல் வெளியீடு.!!

மகான் திரைப்படத்தின் துருவ் விக்ரத்திற்கான போஸ்டர் ரீல் வெளியீடப்பட்டுள்ளது.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மகான்.இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தின் விக்ரம் கதாபத்திரத்திற்கான போஸ்டர் ரீல் (முதல் பார்வை வீடியோ) கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி வெளியானது. இந்த அப்டேட்டை தொடர்ந்து அடுத்த அப்டேட்டாக, துருவ் விக்ரம் கதாபாத்திரத்திற்கான போஸ்டர் ரீல் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியீடபட்டுள்ளது. இதனை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
DADA !! The Son of #Mahaan #DhruvPosterReel
Youtube link: https://t.co/0JSquiyJg9#மகான்_மகன்_தாதா #DHRUVasDADA#SonofMahaan #DaDa#ChiyaanVikram #DhruvVikram @7screenstudio @lalit_sevenscr @music_santhosh @kshreyaas @vivekharshan @actorsimha @SimranbaggaOffc @tuneyjohn pic.twitter.com/XcMYx3prNO— karthik subbaraj (@karthiksubbaraj) September 10, 2021
வீடியோவில், துருவ் விக்ரம் கட்டுக்கோப்பான உடலுடன் தியானம் செய்வது போல் காட்சி இடம்பெற்றுள்ளது. அதில் துருவ் தாதா என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் பாபி சிம்ஹா, சிம்ரன், வாணி போஜன் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025