இந்தியாவில் உற்பத்தி ஆலைகளை மூட முடிவெடுத்துள்ள அமெரிக்க வாகன நிறுவனம் ஃபோர்டு..!
இந்தியாவில் உற்பத்தி ஆலைகளை மூட முடிவெடுத்துள்ளதாக அமெரிக்க வாகன நிறுவனமான ஃபோர்டு அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் பிரபல வாகன நிறுவனம் ஃபோர்டு தற்போது இந்தியாவில் உள்ள இதன் உற்பத்தி ஆலைகளை மூடுவதாக முடிவு எடுத்துள்ளது. ஃபோர்டு நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகள் ஏற்கனவே ஜெர்மனி, ஸ்பெயின், பிரிட்டன் ஆகிய நாடுகளில் மூடப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவில் உள்ள உற்பத்தி ஆலைகளை மூட இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஃபோர்டு நிறுவனத்திற்கு இந்தியாவில் 2 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த 20 வருடங்களாக இந்தியாவில் கார் உற்பத்தி செய்து வரும் இந்த நிறுவனம் லாபம் கிடைக்காமல் நஷ்டத்தில் செயல்ட்பட்டு வருகிறது. மேலும், புதிய மாடல் கார் உற்பத்தி மூலமாகவும் நஷ்டம் அடைந்துள்ளது. இதன் காரணமாக உற்பத்தி மிகவும் குறைவாக செய்யப்பட்டு வருகிறது.
மேலும், இதனால் தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் உள்ள ஃபோர்டு நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகளை மூட இருப்பதாக தெரிவித்துள்ளது. தற்போது இந்த முடிவால் சுமார் 4,000 ஊழியர்களுக்கு வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அமெரிக்காவின் ஃபோர்டு நிறுவனம், அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்ய உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.