ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பத்திரிகையாளர்கள் மீது கொடூர தாக்குதல் ..!
ஆப்கானிஸ்தானில் பத்திரிகையாளர்கள் 2 பேரை தாலிபான்கள் கொடூரமாக தாக்கிய புகைப்படம் வெளியாகியுள்ளது.
அமெரிக்கப்படை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய நிலையில் ஆப்கானிஸ்தானை தங்கள் முழு கட்டுப்பாட்டில் தலிபான்கள் வைத்துள்ளனர். இதனால் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டு மக்களைப் பாதுகாப்பாக மீட்டு வந்தனர்.
தாலிபான்களுக்குப் பயந்து ஆப்கானிஸ்தான் மக்களும் அண்டை நாடுகளுக்குத் தப்பி வருகிறார்கள். இந்நிலையில், தலிபான்களுக்கு ஆதரவாக உள்ள பாகிஸ்தான் உளவு அமைப்புகளைக் கண்டித்து காபூலில் பெண்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தப் போராட்டத்தை பதிவு செய்த பத்திரிகையாளர்கள் தலிபான்களால் கைது செய்யப்பட்டனர்.
தலிபான்களால் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் கடுமையான தாக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. தாக்கப்பட்ட புகைப்படக் கலைஞர் நெமத்துல்லா நக்தி செய்தி நிறுவனம் AFP-யிடம் கூறுகையில் , தாலிபான்களில் ஒருவர் தலையில் கால் வைத்து கான்கிரீட் மீது முகத்தை நசுக்கினார். அவர்கள் என்னைக் கொல்லப் போகிறார்கள் என்று நான் நினைத்தேன், என்று அவர் கூறினார்.
Painful. Afghan journalists from @Etilaatroz, Nemat Naqdi & Taqi Daryabi, display wounds sustained from Taliban torture & beating while in custody after they were arrested for reporting on a women’s rally in #Kabul, #Afghanistan.#JournalismIsNotACrime https://t.co/jt631nRB69 pic.twitter.com/CcIuCy6GVw
— Marcus Yam 文火 (@yamphoto) September 8, 2021