ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை தாமதம்…. மன்னிப்பு கேட்ட சிஇஓ !

Default Image

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது விற்பனை இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக,விற்பனையை செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

வாகனங்களுக்கான பெட்ரோல்,டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வால்,பெரும்பாலான மக்கள் மின்சார வாகனங்களின் பக்கம் தங்களது கவனத்தை செலுத்தியுள்ளனர்.இதனால்,இந்தியாவில் தற்போது மின்சார வாகனங்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது.

அந்த வகையில்,ஓலா இ-ஸ்கூட்டர் முன்பதிவு http://olaelectric.com என்ற இணையதளத்தை பயன்படுத்தி கடந்த ஜூலை 16 ஆம் தேதி முதல்  நடைபெற்றது.அதன்படி,ஓலா இ-ஸ்கூட்டரை வாங்க விரும்புவோர் முன்தொகையாக ரூ. 499 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.மேலும்,எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்து 7-10 நாட்களுக்குள் பணத்தைத் திரும்பப் பெறலாம் என்றும்,முன்பதிவு செய்ய உங்களுக்கு எந்த ஆவணங்களும் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.ஆனால்,சந்தையில் அதன் அறிமுகத் தேதி,விலை போன்றவை தெரிவிக்கப்படாமல் இருந்தது.

அறிமுகம் & விலை:

அதன்பின்னர்,75 வது சுதந்திர தினத்தன்று ஓலா நிறுவனம் தனது S1 மற்றும் S1 Pro என இருவகையாக ஸ்கூட்டர் மாடல்களை ஆக.15 ஆம் தேதியன்று அறிமுகம் செய்தது.அதன்படி,S1 வகை ஸ்கூட்டரின் அதிகபட்ச விலை ரூ.99,999 மற்றும் S1 Pro வகை ஸ்கூட்டரின் விலை ரூ.1,29,999 என தெரிவிக்கப்பட்டது.

பயணம்:

மேலும்,இந்த S1 மாடல் ஓலா ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 121 கி.மீ வரை பயணம் செய்யலாம்.இதன் அதிகபட்ச வேகம் 90 கி.மீ ற்றும் 3.6 வினாடிகளில் 0 முதல் 40 கிமீ வேகத்தை எட்டும்.அதேபோல,S1 PRO மாடல் ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 181கி.மீ வரை பயணம் செய்யலாம்.

இதன் அதிகபட்ச வேகம் 115 கி.மீ. மற்றும் 3 வினாடிகளில் 0-40 கிமீ வேகத்தையும், 5- வினாடிகளில் 0-60 கிமீ வேகத்தையும் அடைய முடியும்.மேலும்,எஸ் 1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் நார்மல், ஸ்போர்ட் மற்றும் ஹைப்பர் ஆகிய 3 வகையான பயண நிலைகள்(ரைடிங் மோட்களும்) உள்ளன.

இவ்விரு ஸ்கூட்டர்களும் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்றும் மற்றும் அக்டோபரில் டெலிவரி தொடங்கும் என கூறப்பட்டது.

அதன்படி,செப்டம்பர் 8 முதல் ஆன்லைனில் விற்பனை துவங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது விற்பனை இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக,விற்பனையை செப்டம்பர் 15 க்கு ஒத்தி வைத்துள்ளது.இதன் காரணமாக ஓலா தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் மன்னிப்பு கோரியுள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது:

“எங்கள் ஓலா எஸ் 1 ஸ்கூட்டரை நேற்று கொள்முதல் செய்ய நாங்கள் உறுதியளித்திருந்தோம். ஆனால் துரதிருஷ்டவசமாக,நேற்று எங்கள் வலைத்தளத்தில் பல தொழில்நுட்ப சிக்கல்களை சந்தித்தோம்.

இதனால,பல மணி நேரம் காத்திருந்த உங்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். இணையதளம் தரத்தில் எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இல்லை. நாங்கள் உங்களை ஏமாற்றினோம் என்பது எனக்குத் தெரியும், மிகவும் ஏமாற்றமளிக்கும் அனுபவத்திற்காக உங்கள் ஒவ்வொருவரிடமும் நான் உண்மையாக மன்னிப்பு கேட்கிறேன்.

மேலும்,டிஜிட்டல் கொள்முதல் பயணத்தை நாங்கள் முதலில் வழங்க விரும்பினோம், இன்று எங்களால் முடியவில்லை. உங்களுக்கு சரியான அனுபவத்தைப் பெற எங்களுக்கு இன்னும் ஒரு வாரம் ஆகும். நாங்கள் இப்போது செப்டம்பர் 15, காலை 8 மணிக்கு எங்கள் விற்பனையை தொடங்குவோம் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். “

ஓலா எஸ்இ மற்றும் எஸ் 1 ப்ரோ ஸ்கூட்டர்களின் முன்பதிவு மற்றும் விநியோக தேதி மாறாமல் இருக்கும் என்று ஓலா சிஇஓ வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்தார். “உங்கள் முன்பதிவு மற்றும் கொள்முதல் வரிசையில் உங்கள் நிலை மாறாமல் உள்ளது, எனவே நீங்கள் முதலில் முன்பதிவு செய்தால், நீங்கள் அதை முதலில் வாங்க முடியும். எங்கள் விநியோக தேதிகளும் மாறாமல் இருக்கும்,” என்று அவர் அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்