#Breaking: 2 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு..!
2 மாநிலங்களவை இடங்களுக்கு அக்டோபர் 4 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் காலியாகவுள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு அக்டோபர் 4 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முன்னதாக பேரவைத் தேர்தலில் வேப்பனஹள்ளி தொகுதியில் கே.பி.முனுசாமி அவர்களும், ஒரத்தநாடு தொகுதியில் வைத்தியலிங்கம் அவர்களும் வெற்றி பெற்றனர்.எனினும்,இருவரும் சட்ட சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காரணத்தினால்,தங்களது மாநிலங்களவை பதவியை ராஜினமா செய்தனர்.
இந்த நிலையில்,2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி,வேட்பு மனு தாக்கல் செய்யவதற்கு செப். 22 ஆம் தேதி கடைசி நாளாகும்.மேலும்,அக்டோபர் 4 ஆம் தேதி காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும்,அன்று மாலை 5 மணிக்கு தேர்தல் முடிவுகள் வெளியாகும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே,காலியாக இருந்த 1 இடத்திற்கு தேர்தல் நடைபெற்று திமுக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்க்கது.