பொறியியல் சார்நிலைப் பணிகளின் எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு – டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு..!

Default Image

பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளின் எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளதாக  டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வருகின்ற செப்டம்பர் 18-ம் தேதி நடைபெற உள்ள ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும்,இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூயிருப்பதாவது:

“தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்:06/2021, நாள் 05.03.2021-ன் வாயிலாக அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் பதவிகளுக்கான திட்டமிடப்பட்ட எழுத்துத் தேர்வு 18.09.2021 முற்பகல் மற்றும் பிற்பகலில் 7 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளமான http://www.tnpsc.gov.in மற்றும் http://www.tnpscexams.in -ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட (Hall Ticket) நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்ய முடியும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட அறிவுரைகளை கவனமாக குறித்துக் கொள்ளவும்:

  • தேர்வர்கள் விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்யவும் விடைகளை குறிக்கவும் கருப்பு நிற மை பந்து முனை பேனா மட்டுமேபயன்படுத்த வேண்டும். தவறினால் அவ்வாறான விடைத்தாள்கள் தேர்வாணையத்தால் செல்லாததாக்கப்படும்.
  • எந்த ஒரு தேர்வரும் முற்பகலில் நடைபெறும் தேர்விற்கு 09.15 மணிக்குப் பின்னர் தேர்வுக்கூடத்திற்குள் நுழையவோ 1.15 மணிக்கு முன்னர் தேர்வுக்கூடத்திலிருந்து வெளியேறவோ அனுமதிக்கப்படமாட்டார்கள், எந்த ஒரு தேர்வரும் பிற்பகலில் நடைபெறும் தேர்விற்கு 02.15 மணிக்குப் பின்னர் தேர்வுக்கூடத்திற்குள் நுழையவோ 5.15 மணிக்கு முன்னர் தேர்வுக்கூடத்திலிருந்து வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  • விண்ணப்பதாரர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட தேர்வுக்கூடம் அமைந்துள்ள இடத்தினை எளிதில் தெரிந்துகொள்ளும் பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில், விரைவுத்தகவல் குறியீடு (QR CODE) அச்சிடப்பட்டுள்ளது, இதனை விரைவுத்தகவல் குறியீட்டு செயலி மூலம் ஸ்கேன் செய்து தேர்வுக்கூடம் அமைந்துள்ள இடத்தினை Google Maps மூலமாக தெரிந்து கொண்டு பயன் பெறலாம்.
  • தேர்வு அறைக்குள் அலைபேசியை கொண்டுசெல்ல அனுமதியில்லை. எனவே விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் பத்தி எண் 17 (A) (iv)ல் உள்ள குறிப்பின்படி தங்களது அலைபேசி உட்பட பிற உடமைகளை தேர்வுமையத்திலுள்ள பாதுகாப்பு அறையில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
  • இருப்பினும் சொந்த உடமைகளை பாதுகாப்பு அறையில் வைப்பது தேர்வரின் சொந்த பொறுப்பிற்குட்பட்டதாகும்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்