14 வயது சிறுமியை கூட்டு பாலியல் வழக்கில் – மேலும் 6 பேர் கைது..!
புனேயில் 14 வயது சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மேலும் 6 பேரை புனே போலீசார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
14 வயது சிறுமி ஆகஸ்ட் 31 அன்று இரவு 10.30 மணியளவில் புனே ரயில் நிலையத்தில் தனது நண்பரை சந்திக்க வீட்டை விட்டு சென்றுள்ளார். எனினும், அவளுடைய நண்பர் வரவில்லை. இதைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட குற்றவாளியில் ஒருவரான ஆட்டோ டிரைவர், அந்த சிறுமியை ரயில் நிலையத்தில் இருந்து ஒரு லாட்ஜுக்கு அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
பின்னர், அவர் தனது நண்பர்களையும் அழைத்து சிறுமியை பல இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவர் வெவ்வேறு நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் ரயில் நிலையத்தின் சிசிடிவி காட்சிகளை வைத்து ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மேலும் 6 குற்றவாளிகள் புனே நகர போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேரும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஒன்பது நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வன்கொடுமை வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.