புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி பிறந்த தினம் இன்று..!
புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி பிறந்த தினம் வரலாற்றில் இன்று கொண்டாடப்படுகிறது.
1899 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி தஞ்சை மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறை அடுத்த புத்த மங்கலத்தில் பிறந்தவர்தான் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி. இவர் புகழ்பெற்ற எழுத்தாளரும், சரித்திரக் கதைகளின் முன்னோடியுமாக திகழ்ந்துள்ளார். இவர் எழுதிய புத்தகங்களை படித்த காங்கிரஸ் தலைவர் டி எஸ் எஸ் ராஜன் அவர்கள் இவர் எழுத்துலகில் சாதிக்க வேண்டியவர் என வாழ்த்தி கூறியுள்ளார்.
இவர் 35 சிறுகதை தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக் கட்டுரைகள், வாழ்க்கை வரலாற்று நூல்களை ஆகியவற்றை எழுதியுள்ளார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் வரலாற்றில் நீங்காத இடத்தை இவருக்கு பெற்றுத் தந்துள்ளது. இது மூன்று ஆண்டுகளாக எழுதப்பட்டது என கூறப்படுகிறது. முன்னோடி பத்திரிகையாளர், புனைகதை எழுத்தாளர், கலை விமர்சகர், கட்டுரையாளர், பாடல் ஆசிரியர், சுதந்திரப் போராட்ட வீரர் என பாராட்டப்பெற்ற இவர் தனது 55-வது வயதில் 1954 ஆம் ஆண்டு மறைந்தார்.