#BREAKING: மாநில அளவில் ஆதிதிராவிடர் நல ஆணையம் – முதல்வர் அதிரடி அறிவிப்பு!
மாநில அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் தன்னாட்சி அதிகாரத்துடன் உருவாக்கப்படும் என முதல்வர் அறிவிப்பு.
தமிழக சட்டப்பேரவையில் மாநில அளவில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் உரிமைகள் பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு தீர்வுகாண “ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல ஆணையம்” தன்னாட்சி அதிகாரத்துடன் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். பேரவையில் விதி எண் 110ன் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வரும் முதல்வர், இதனை அறிவித்துள்ளார்.
மாநில அளவில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல ஆணையம்” தன்னாட்சியுடன் அமைக்க சட்ட திருத்தும் கொண்டு வரப்படும் என்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பதிவான வழக்குகளை விரைந்து விசாரிக்க 4 கூடுதல் நீதிமன்றம் உருவாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதன்படி, சேலம், கிருஷ்ணகிரி, மதுரை நெல்லை ஆகிய மாவட்டங்களில் கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும். சாதியை ஒழிப்பதற்கு முன்னுதாரணமாக இருக்கும் கிராமத்திற்கு ரூ.10 லட்ச சிறப்பு தொகை பரிசாக வழங்கப்படும் என தெரிவித்த முதலவர், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில், பள்ளிக்கல்வித்துறை தலையிடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.